How to use two WhatsApp Account in one Smartphone.
இதன் மூலம் பயனர்கள் ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை லாக்-இன்(Log In) செய்யலாம் என்று மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்ததுள்ளார். இதன் மூலம், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற பிற தளங்களில் கிடைக்கும் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தைப் போலவே, பயனர்கள் WhatsApp பயன்பாட்டிற்குள் ஒரு தொலைபேசியில் இரண்டு WhatsApp கணக்குகளை பயன்படுத்த முடியும்.
உங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட கணக்குகளுக்கு இடையில் மாறுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் - இதனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் செயலியில் வெளியேறவோ (Logout), இரண்டு தொலைபேசிகளை எடுத்துச் செல்லவோ அல்லது தவறான கணக்கிலிருந்து செய்தி அனுப்புவதைப் பற்றி கவலைப்படவோ தேவையில்லை" என்று வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
இரண்டாவது வாட்ஸ்அப் கணக்கை அமைக்க, பயனர்களுக்கு இரண்டாவது ஃபோன் எண் மற்றும் சிம் கார்டு அல்லது ஈசிம் செயல்பாட்டை ஆதரிக்கும் ஃபோன் தேவைப்படும் என்று மெட்டா குறிப்பிட்டுள்ளது. மெபைலில் தங்களது இரண்டாவது கணக்கைச் சரிபார்க்க, SMS மூலம் WhatsApp அனுப்பும் ஒரு முறை கடவுக்குறியீட்டைப் பெற பயனர்களுக்கு இரண்டாவது தொலைபேசி அல்லது அதன் சிம் கார்டு தேவைப்படும்.
ஒரு வாட்ஸ்அப்பில் இரண்டு WhatsApp கணக்குகளை பயன்படுத்துவது எப்படி
ஒரு தொலைபேசியில் இரண்டு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்த:
➤வாட்ஸ்அப்பைத் திறந்து மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
➤"அமைப்புகள்" என்பதை தேர்ந்தெடுத்து பின்னர் "கணக்கு" என்பதை கிளிக் செய்யவும்.
➤"கணக்கைச் சேர்" என்பதை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் இரண்டாவது கணக்கை அமைக்க முடியும்.
➤உங்கள் இரண்டாவது WhatsApp கணக்கு அமைக்கப்பட்டதும், பயன்பாட்டின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் தட்டி "கணக்கு" என்பதைத் தேர்வு செய்து கணக்குகளுக்கு இடையில் மாறி கொள்ள முடியும்.
மெட்டா பயனர்கள் அதிகாரப்பூர்வ WhatsApp பயன்பாட்டை மட்டுமே பயன்படுத்த பரிந்துரைக்கிறது மற்றும் உங்கள் தொலைபேசியில் கூடுதல் கணக்குகளைச் சேர்க்க அதிகாரப்பூர்வமற்ற அல்லது போலி பதிப்புகளைப் பதிவிறக்குவதைத் தவிர்க்கவும் மெட்ட தரப்பில் கூறப்பட்டுள்ளது. உங்களின் மெசேஜ்களின் பாதுகாப்பையும் தனியுரிமையையும் அதிகாரப்பூர்வ WhatsApp மட்டுமே உறுதி செய்கிறது, எனவே போலியான சாயல்களை கொண்ட அதே அளவிலான செயலிகள் அதற்கு இணையான பாதுகாப்பை வழங்காது.
இதற்கிடையில், பயனர்கள் பல்வேறு சாதனங்களில் தங்களது WhatsApp கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதை எளிதாக்க 2021 ஆம் ஆண்டில், மெட்டா நிறுவனம் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இது பயனர்கள் தங்கள் கணக்குகளை Android mobile, டேப்லெட்டுகள், உலாவிகள் அல்லது கணினிகளில் ஒரே நேரத்தில் அணுகுவதை எளிதாக்கியது. தற்போது கூடுதல் சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் இந்த அம்சத்தை நீட்டித்துள்ளது. இதன்மூலம் நீங்கள் இப்போது உங்கள் வாட்ஸ்அப் கணக்கை இரண்டு சாதனங்களில் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.
0 Comments