feed

6/recent/ticker-posts

ரோபோக்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன?


  பல்வேறு துறைகளில் ரோபோட்டிக் ஆட்டோமேஷன் வளர்ந்து வரும் நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் இது இன்றியமையாத ஒன்றாக மாறிவிடும்,  இந்நிலையில் பெரும்பாலான வணிகங்கள் இந்த ரோபோட்டிக் வழங்கும் பல நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றன. 

இதற்கிடையில் ரோபோடிக் ஆட்டோமேஷன் முறையை செயல்படுத்துவது குறித்து சில சிக்கல்களும் நம்பிக்கையின்மையும் நிலவி வருகின்றன. தற்போதுள்ள உற்பத்தி முறையை ஆட்டோமேஷன்  செய்யாமல் இருப்பதற்கு சில நியாயமான ஆட்சேபனைகள் உள்ளன. இந்த ரோபோட்டிக் ஆட்டோமேஷனைப் பயன்படுத்துவதன் சில நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி பார்ப்போம். 

 நன்மைகள் :

  • செலவுத்திறன் :

ரோபோடிக் ஆட்டோமேஷனுக்காக உணவு இடைவேளை, விடுமுறை நாட்கள், நோய்வாய்ப்பட்ட விடுப்பு அல்லது ஷிப்ட் நேரம் எதுவும் ஒதுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. இது தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மீண்டும் மீண்டும் செய்யும் படி  வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் வேறு வேலையை Program செய்யும் வரையில் அது தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும். 

இதன் மூலம் குறைந்த செலவில் உற்பத்தி அதிகரிப்பு என்பது எந்தவொரு உற்பத்தியாளருக்கும் அதிகப்படியான நன்மைகளை உருவாக்குகிறது. 

  • மேம்படுத்தப்பட்ட தர உத்தரவாதம்:

தொழிலாளர்கள் சில காலம் மட்டுமே தான் செய்யும் வேலையை மீண்டும் மீண்டும் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் பின் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செயல்படும் திறன் மற்றும் விருப்பம் இயல்பாகவே குறையும். இந்த திறன் குறைதல் என்பது வேலையில்  பிழைகள் மற்றும் சில நேரங்களில் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களின் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும்.

ரோபோடிக் ஆட்டோமேஷன் இந்த வகையான அபாயங்களை நீக்கும் வகையில் துல்லியமாக பொருட்களை தயாரித்து, தேவையான தரத்தை தவறாமல் பூர்த்தி செய்கிறது. அதிக அளவிலான தயாரிப்புகள் உயர் தரத்தில் உற்பத்தி செய்யப்படுவதால், நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கு இது பல  சாத்தியங்களை உருவாக்குகிறது.

  • அதிகரித்த உற்பத்தித்திறன் :

மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளைச் சமாளிக்க ரோபோட்டிக் ஆட்டோமேஷனைப் பயன்படுத்துவது முழுமையான பலனை அளிக்கும். ரோபோக்கள் மீண்டும் மீண்டும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் அவ்வாறு இல்லை. உற்பத்தி செயல்முறையில் ஆட்டோமேஷனின் பயன்பாடு பல்வேறு  நன்மைகளைக் கொண்டுள்ளது.  

  • அபாயகரமான சூழலில் வேலையை மேற்கொள்ளுதல் : 

பணியிடத்தில் பணியாளர்கள் நிலையற்ற அல்லது ஆபத்தான சூழலில் பணிபுரியும் நிலை ஏற்படலாம் எடுத்துக்காட்டாக, அதிக அளவு இரசாயனங்களை கையாளும் போது ரோபோடிக் ஆட்டோமேஷன் சிறந்த தீர்வை வழங்குகிறது, ஏனெனில் அது எந்தவொரு இடையூறும் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்யும்.


தீமைகள்

  • வேலை இழப்புகள் :

ரோபோடிக் ஆட்டோமேஷன் அறிமுகத்தை மேற்கொள்ளுவதில் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று தொழிலாளர்களின் வேலையில் ஏற்படும் தாக்கம். ஒரு ரோபோ வேகமான மற்றும் சீரான விகிதத்தில் செயல்பட முடிந்தால், மனிதர்கள் தேவைப்படாமல் போகலாம். 

  • நிறுவ மற்றும் இயக்க தேவைப்படும் செலவுகள் :

தங்கள் தொழிற்சாலைகள்/செயல்பாடுகளில் ரோபோக்களை நிறுவ விரும்பும் வணிக உரிமையாளர்கள் குறிப்பிடத்தக்க முன் செலவுகளை எதிர்கொள்கின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ரோபோக்கள் மலிவானவை அல்ல- குறிப்பாக அவை உயர் தொழில்நுட்பம், ஒரு குறிப்பிட்ட உயர்ந்த பணிக்கு தேவைப்படும் போது. அந்த நிறுவனத்தின் நிதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மற்றும் ரோபோக்களை வேலை செய்யும் நிலையில் வைத்திருக்க தேவையான மின்சாரத்திற்கு உண்டாகும் செலவும் அதிகமாக உள்ளது.

  •  நிலையான சக்தி தேவை :

ரோபோக்கள் இயங்குவதற்கு மின்சாரம் தேவை. இது அவற்றை இயக்குவதற்கு இன்றியமையாத ஒன்றாகும் இது அவற்றை மேலும் விலை உயர்ந்ததாக ஆக்குகிறது மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கையும் விளைவிக்கின்றது. சமூகத்தில் ரோபோக்களுக்கான வளர்ந்து வரும் தேவையால் புவி வெப்பமடைதல் மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வு ஆகியவற்றில் கூடுதல் சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.

Post a Comment

2 Comments