Hide Your Online Status On WhatsApp, here is how in Tamil
பயனர்கள் தங்கள் 'ஆன்லைன்' நிலையை அனைவரிடமிருந்தும் மறைக்க (Hide Your Online Status On WhatsApp)அனுமதிக்கும் புதிய அம்சத்தை WhatsApp சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம் இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று WhatsApp நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பயனர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் தனியுரிமை அம்சங்களை அதிகரிக்கவும் வாட்ஸ்அப் ஒவ்வொரு மாதமும் புதிய அம்சங்களை அறிவித்து வருகிறது. சமீபத்தில், மெட்டாவுக்குச் சொந்தமான WhatsApp ல் ஸ்கிரீன்ஷாட் தடுப்பது, ஆன்லைன் நிலையை மறைத்தல் மற்றும் குழுக்களை விட்டு அமைதியாக வெளியேறுவது உள்ளிட்ட மூன்று தனியுரிமை சார்ந்த அம்சங்களை அறிவித்தது. இந்த மூன்று அம்சங்களும் வளர்ச்சியின் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், இந்த மாத இறுதிக்குள் அனைத்து பயனர்களையும் சென்றடையும் என்றும் வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இன்னும் சரியான வெளியீடு தேதி தெரியவில்லை.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்று ஆன்லைன் நிலையை மறைத்தல் - Hide Your Online Status On WhatsApp. இதன் மூலம் பயனர்கள் தங்களின் ஆன்லைன் நிலையை யாரிடம் வேண்டுமானாலும் மறைக்க முடியும்.இந்த அம்சம் முதலில் iOS மற்றும் Android பீட்டா பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் உலகளாவிய வெளியீட்டிற்கு செல்லும். WaBetaInfo வலைத்தளத்தின்படி, இந்த அம்சம் இணைய பயனர்களும் அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தங்கள் ஆன்லைன் இருப்பை தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்காக இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளதாக WhatsApp நிறுவனம் தெரிவித்துள்ளது. இணைய பயனர்களுக்கும் இந்த அம்சம் விரைவில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அம்சம் கிடைக்கும்போது உண்மையில் எவ்வாறு செயல்படும் என்பதை WhatsApp ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது. உங்கள் ஆன்லைன் நிலையை மறைக்க:
Hide Your Online Status On WhatsApp, Here is how :
முதலில் வாட்ஸ்அப்பைத் திறக்க வேண்டும்
- அமைப்புகளுக்குச்(Settings) செல்லவும்
- கணக்கிற்குச்(Account) செல்லவும்
- பின் தனியுரிமை (Privacy option) விருப்பத்திற்கு செல்லவும்
"Who can see when I’m online" என்பதை கிளிக் செய்யவும்.
- பின்னர் காண்பிக்கும் இரண்டு விருப்பங்களில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் : "everyone" மற்றும் "same as last seen"
- same as last seen -ஐ தேர்ந்தெடுத்தால், Last seen ல் நீங்கள் மறைத்துள்ள தொடர்புகள் (Contacts) எல்லாம் உங்கள் ஆன்லைன் நிலையையும் (Online status) பார்க்க முடியாது. அதேபோல் நீங்கள் (My contact except) ஐ தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் உங்களது Online status ஐ காண்பிக்கலாம்.
- உங்கள் ஆன்லைன் நிலையை (Online status) அனைவரிடமிருந்தும் மறைக்க விரும்பினால், Last Seen பிரிவில் "Nobody" மற்றும் "Online status" பிரிவில் "Same as last seen" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
குறிப்பிடத்தக்க வகையில், வாட்ஸ்அப் ஏற்கனவே பயனர்கள் தங்கள் நிலை, சுயவிவரப் படம் மற்றும் Last seen-ஐ அனைவரிடமிருந்தும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களிடமிருந்தும் மறைக்க அனுமதிக்கிறது. இப்போது, நீங்கள் ஆன்லைனில் வரும்போதெல்லாம் ஒவ்வொரு Chat Box மேலேயும் காட்டப்படும் “ஆன்லைன்” நிலையை இந்த அம்சம் மறைக்கும். இதன் மூலம் ஆன்லைனில் உள்ளீர்களா அல்லது ஆஃப்லைனில் இருக்கிறீர்களா என்பதை இது உங்களுடைய தொடர்புக்குத் தெரியப்படுத்துகிறது. இதனால் WhatsApp ல் உங்களது Online Privacy-ஐ பாதுகாத்து கொள்ள முடியும்.
0 Comments