feed

6/recent/ticker-posts

இனி இன்டர்நெட் இல்லாமல் ஆஃப்லைனில் ஜிமெயிலை பயன்படுத்தலாம் !!

How to you use Gmail offline without internet!!

இன்டர்நெட் இல்லாமல் ஆஃப்லைனில் ஜிமெயிலை (Gmail) பயன்படுத்தும் வசதியினை கூகிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் இனி இன்டர்நெட் இல்லாமலே மெயில்களை படிக்கவும், பதில் அளிக்கவும், மெயில்களை தேடவும் முடியும். இந்த ஆஃப்லைனில் ஜிமெயிலை பயன்படுத்தும் அம்சம் இணைய இணைப்பு இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு  மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்போது இன்டர்நெட் இல்லாமல் ஆஃப்லைனில் ஜிமெயிலை பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றி கீழ்க்கண்ட படிநிலைகளில் பார்ப்போம். 

படிகளுக்குள் செல்வதற்கு முன், Google Chrome இல் Gmail ஆஃப்லைன் வசதி Incognito Mode இல்லாமல் Normal Browsing முறையில் மட்டுமே வேலை செய்யும் என்றும் கூகுள் கூறுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போது, ​​கூகுள் விளக்கியபடி ஆஃப்லைனில் ஜிமெயிலை எவ்வாறு பயன்படுத்துவது பற்றி இங்கே:

  • முதலில் உங்கள் Device-ல் mail.google.com என்ற இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். 

How to you use Gmail offline without internet!!


  • பின்னர் இன்பாக்ஸில், Settings-ஐ கிளிக் செய்யவும்.அடுத்து தோன்றும் பாப்-அப் மெனுவில், அனைத்து அமைப்புகளையும் காண்க (see all settings)என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

How to you use Gmail offline without internet!!

  • பின்னர் தோன்றும் பக்கத்தில் மேல் உள்ள வரிசையில் ஆஃப்லைன் டேப் (offline Tab) ஐ கிளிக் செய்யவும்.

How to you use Gmail offline without internet!!

  • இந்தப் பக்கத்தில், "Enable offline mail" என்ற ஆப்ஷன்  (Opttion)-ஐ கிளிக் செய்யவும்.

  • பின்னர் உங்கள் மின்னஞ்சல்களை எத்தனை நாட்கள் சின்கரனைஸ் (sync) செய்வது என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

  • கூகுள் உங்கள் கணினியில் எவ்வளவு free space உள்ளது என்பதை காண்பிக்கும், மேலும் கணினியில் எத்தனை நாட்களுக்கு ஆஃப்லைன் டேட்டாவை சேமித்து வைத்திருக்க வேண்டும் என்பதற்கான விருப்பத்தையும் வழங்கும்.

  • இது முடிந்ததும் நீங்கள் இப்போது, கீழே உள்ள "மாற்றங்களைச் சேமி" (Save changes) பொத்தானைக் கிளிக் செய்யவும் .

How to you use Gmail offline without internet!!

 தற்போது இன்டர்நெட் இல்லாமல் ஜிமெயிலை (Gmail) பயன்படுத்தும் வசதி உங்களது Device-ல் செயல்படுத்தப்பட்டிருக்கும். 

Post a Comment

0 Comments