feed

6/recent/ticker-posts

ஒருவரின் தொலைபேசி எண்ணைச் சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் (Whatsapp) மெசேஜ் அனுப்புவது எப்படி?

 ஒருவரின் தொலைபேசி எண்ணைச் சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி?

How to send a WhatsApp message without saving  phone number

WhatsApp ஒரு பிரபலமான செய்தியிடல் பயன்பாடாகும், மேலும் இது மில்லியன் கணக்கான பயனர்களால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப்பில் யாருக்காவது மெசேஜ் அனுப்ப வேண்டுமானால் அந்த தொலைபேசி எண் உங்களது மொபைலில் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும் அப்போது தான் அவருக்கு WhatsApp ல் மெசேஜ் செய்ய முடியும்,சில வேலைகளுக்காக வாட்ஸ்அப்பில் தெரியாத நபரை தொடர்பு கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம் அப்போது, நீங்கள் வழக்கமாக அந்த தொலைபேசி எண்ணைச் சேமிக்க  வேண்டும். 

ஆனால் ஒரு சிறிய வேலைக்காக வாட்ஸ்அப்பில் ஏதேனும் ஒரு நபரின் எண்ணை உங்களது மொபைலில் சேமிப்பது என்பது அவசியமற்றதாக உங்களுக்கு தோன்றலாம், கூடுதலாக, தெரியாத நபரின் எண்ணைச் சேமித்தால், அந்த நபர் உங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் உங்களது படத்தையும் பார்க்க முடியும். இதனால் பலர் ஒரு சிறு வேலைக்காக அவர்களின் தொலைபேசி எண்ணை நீங்கள் சேமிக்க விரும்பாமல் இருக்கலாம்.

இதற்கு ஒருவரின் தொலைபேசி எண்ணை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப உங்களை அனுமதிக்கும் சில மூன்றாம் தரப்பு ஆஃப்கள் (Apps) உள்ளன, ஆனால் இந்த பயன்பாடுகளைப் பயன்படுத்துவது அவ்வளவாக பரிந்துரைக்கப்படமாட்டாது, ஏனெனில் இது உங்கள் பாதுகாப்பை பாதிக்கலாம் மற்றும் இதனால் உங்கள் WhatsApp கணக்கு முடக்கப்டலாம். இதன் விளைவாக, இதுபோன்ற பயன்பாடுகளைத் தவிர்ப்பது எப்போதும் சிறந்தது. ஆனால் இதற்கு ஒரு சிறந்த வழி உள்ளது இதன் மூலம் ஒருவரின் தொலைபேசி எண்ணைச் சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப முடியும், அதற்கான வழிமுறைகள் கீழே..

இந்த முறை Android மற்றும் iOS இரண்டிற்கும் வேலை செய்கிறது. எந்த பிரவுசரையும் பயன்படுத்தி கொள்ளலாம் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும்.

  • முதலில் உங்கள் தொலைபேசியில் உள்ள ஏதேனும் ஒரு பிரவுசரை திறக்க வேண்டும். இப்போது இந்த லிங்க்-ஐ http://wa.me/xxxxxxxxxx உங்களது பிரவுசரில் டைப் செய்ய வேண்டும்.              
  • குறிப்பு: இந்த லிங்க்-ஐ நகலெடுத்து ஒட்ட வேண்டாம். URL இல் உள்ள "xxxxxxxxx" என்பதற்குப் பதிலாக நீங்கள் மெசேஜ் செய்ய விரும்பும் அந்த நபரின் ஃபோன் நம்பரையும் அந்த நாட்டின் குறியீட்டையும் வழங்க வேண்டும்.                                                            
  • எடுத்துக்காட்டாக நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் எண் +9199111111111 எனில், லிங்க் http://wa.me/919911111111 ஆக மாறும். இங்கே, முதல் இரண்டு இலக்கங்கள் (91) என்பது இந்தியா நாட்டின் குறியீடாகும், அதைத் தொடர்ந்து நபரின் மொபைல் எண்ணும்.                                                             
  • இணைப்பைத் தட்டச்சு செய்தவுடன், இணைப்பைத் திறக்க என்டர் செய்யவும்.                                                            
    How to send a WhatsApp message without saving  phone number

  • அடுத்து, பெறுநரின் ஃபோன் எண் மற்றும் பச்சை மெசேஜ் பட்டனுடன் வாட்ஸ்அப் வலைப்பக்கத்தைக் காண்பீர்கள். பின் அந்த பச்சை பட்டனை கிளிக் செய்யவும், இப்போது நீங்கள் WhatsApp க்கு திருப்பி விடப்படுவீர்கள்.

அவ்வளவுதான், இப்போது நீங்கள் ஒருவரின் தொலைபேசி எண்ணைச் சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப முடியும்.

Post a Comment

0 Comments