feed

6/recent/ticker-posts

How to speak english - training - english (Part-5) - tamil

How to speak english - training - english (Part-5) - tamil

ஓர் எளிய வாக்கியத்தின் பகுதிகள் என்ன?

முதலில், பகுதி என்றால் என்ன?

சைக்கிளை நாம் பார்க்கும்போது அது சைக்கிளாகதான் நமக்குத் தெரியும். ஆனால் அதில் ஏகப்பட்ட பாகங்கள் இருக்கின்றன. சக்கரம், பெடல், ஹேண்டில்பார் என்று ஒவ்வொரு பாகமாக அதனைப் பிரித்துப் பார்க்கவேண்டிய அவசியம் நமக்கு இல்லை. ஏறி உட்கார்ந்து மிதித்தால் சைக்கிள் செல்கிறது, அவ்வளவுதான்.

ஆனால் இப்போது, நமக்கு ஆங்கிலம் என்ற சைக்கிளை ஓட்டத் தெரியவில்லை. பெடலை மிதித்தால் சக்கரம் சுழலும் அப்போது உடலைச் சமநிலைப்படுத்திக் கொண்டு ஹேண்டில் பாரைப் பிடிக்கவேண்டும் என்கிற அளவுக்கேனும் அதன் பகுதிகளை நாம் புரிந்துகொண்டால்தான் ஓட்டக் கற்க இயலும். சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த 11 am reading a book' என்ற வாக்கியத்தையே மீண்டும் எடுத்துக்கொள்வோம். இதில் என்னென்ன பகுதிகள் இருக்கின்றன?

I

am 

reading

a

book

மொத்தம் 5 சொற்கள் உள்ளன. ஆனால் நாம் சொல்வது அதுவல்ல. ஐந்து என்ன, ஐம்பது சொறள் இருந்தாலும், ஒரு வாக்கியத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகள் என்றால் இந்த மூன்றுதான். 

1. யார் செய்தார்கள்?

2. என்ன செய்தார்கள்?

3. எது செய்யப்பட்டது?

இதே உதாரணத்தைத் தமிழில் பார்ப்போம்:

நான் ஒரு புத்தகத்தைப் படிக்கிறேன். இங்கே ஒரு வேலை நடந்திருக்கிறது. அதாவது, “படித்தல்' என்கிற வேலை. இந்த வேலையை யாரோ செய்திருக்கிறார்கள், அதாவது, நான். எதுவோ படிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, புத்தகம், ஆக, 'நான் ஒரு புத்தகத்தை படிக்கிறேன்' என்கிற வாசகத்தில் செயல், அதைச் செய்தவர், என்ன செய்யப்பட்டது என்கிற மூன்றும் இடம்பெற்றுள்ளது. இதை அப்படியே ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்றால்:

செயல் என்பது Reading: செய்தவர் என்பது i am செய்யப்பட்டது என்பது Book இவற்றுக்கு இலக்கணரீதியாக என்ன பெயர் என்ற பஞ்சாயத்துக்குள் நாம் போகவேண்டாம். சும்மா நம் வசதிக்காக இவற்றுக்கு ஒரு பெயர் வைத்துக்கொள்வோம், யார் செய்தார்களோ அவர்களை 'ஆள்' என்று அழைப்போம். என்ன செய்யப்பட்டதோ அதை 'வேலை' என்று அழைப்போம். எதன்மீது அந்த வேலை செய்யப்பட்டதோ அதைப் 'பொருள்' என்று அழைப்போம். ஆள், வேலை, பொருள்: இந்த மூன்றும் ஓர் எளிமையான வாக்கியத்துக்கு அவசியம். ஆனால் ஒன்று, ஒவ்வொரு வாக்கியத்திலும் இந்த மூன்றுமே இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. மூன்றில் ஏதாவது ஒன்று.

இரண்டு இருந்தால்கூடப் போதும். உதாரணமாக "நான் படிக்கிறேன்" என்ற வாக்கியத்தில் ஆள் இருக்கிறார், வேலை இருக்கிறது, ஆனால் பொருள் இல்லை. சில நேரங்களில் இந்த மூன்றில் சிலது ஒளிந்திருக்கக்கூடும். உதாரணமாக, 'ஓடினேன்" என்று ஒரு வாக்கியம் இருந்தால், அதில் ஓடுதல் என்ற வேலை உள்ளது. ஆனால் யார் ஓடினார்கள் என்கிற ஆள் விவரம் இல்லை. அதேசமயம் ஓடினேன்' என்று சொல்வதால், யாரோ ஓடவில்லை, அந்த வாக்கியத்தைச் சொன்னவர்தான் ஓடினார், அவர்தான் 'ஆள்' என்று நாம் ஊகித்துவிடலாம்.

இந்த நுட்பங்களெல்லாம் ஆங்கிலத்திலும் உண்டு. சொல்லப்போனால், இலக்கண விஷயத்தில் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் வேறு எந்த மொழிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.' நாம் சற்றுமுன் பார்த்ததுபோல, “நான்' என்கிற ஆள் ஆங்கிலத்தில் 'I' என்று ஆகிறார். “படிக்கிறேன்' என்கிற வேலை 'Reading' என்று ஆகிறது. 'புத்தகம்' என்கிற பொருள் Book' என்று ஆகிறது. ஆக சொற்களை மாற்றினால் போதும், தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரிய வித்தியாசமே கிடையாது. வாக்கிய அமைப்பில் கவனியுங்கள். பெரிய வித்தியாசம் கிடையாது' என்றுதான் சொன்னோம்.

வித்தியாசமே கிடையாது என்று அதைப் புரிந்துகொண்டுவிடக்கூடாது. உதாரணமாக, I am reading a book' என்பதில் வரும் 'am'க்கு இணையான ஒரு தமிழில் இல்லை, அது ஏன் என்கிற நுட்பமான விஷயத்தை சொல் இப்போது விவாதிக்கவேண்டாம், மாற்றங்கள் உண்டு. ஆனால் அடிப்படை ஒன்றே என்ற அளவில் இதைப் புரிந்துகொள்ளுங்கள், இப்போது உங்களுடைய பயிற்சிக்காகக் கீழே 10 வாக்கியங்களைக் கொடுத்திருக்கிறோம். இவை ஒவ்வொன்றிலும் எது ஆள், எது வேலை, எது பொருள் என்று கண்டுபிடியுங்கள். ஒருவேளை பொருளோ, வேலையோ, ஆ ஆளோ இல்லையென்றால் அதைக் குறிப்பிடுங்கள், அது ஒளிந்திருந்தால் அதையும் குறிப்பிடுங்கள்.

ஒரு விஷயம், இங்கே இயன்றவரை எளிய சொற்கள், வாக்கியங்களையே பயன்படுத்தியிருக்கிறோம். ஆனாலும். இதில் வரும் சில சொற்களுக்கு அர்த்தம் புரியாவிட்டால் அகராதியைப் பாருங்கள், இணையத்தில் translate.google.com என்ற தளத்தைப் பாருங்கள். ஆங்கிலச் சொல்வளம் மேம்பட அதுதான் சிறந்த வழி,

குறிப்பு: இதுபோல் இப்பதிவில் உள்ள பயிற்சிகள் அனைத்துக்கும் விடைகள் கீழே தரப்பட்டுள்ளன. விடை எழுதியபிறகு, அதனைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

1.I am walking,

2. You like my father.

3.1 went to Chennai.

4.1live in Chennai.

5. Manoj ate an ice cream.

6. Priya cooked a meal. 7. You are running.

8. The car is red,

9.The student passed the exam,

10. The judge gave the sentence.


பதில்...


How to speak english - training - english (Part-5) - tamil
How to speak english - training - english (Part-5) - tamil
How to speak english - training - english  tamil - (Part-6) to be continued)..

Post a Comment

0 Comments