பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துவத்துவது எப்படி?

How to use the Internet safely?

இன்றைய இணைய பயன்பாடு என்பது ஒரு இன்றியமையாத அங்கமாக உருவெடுத்ததுள்ளது இதன் மூலம் பல்வேறு நன்மை கிடைக்கும் போதிலும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன. நீங்கள் இணையத்தை பயன்படுத்துகையில் இதில் ஒரு நபர் உங்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பணத்தை திருடுகிறார் இந்த செயல் முறையானது உங்களுக்கே தெரியாமல் மிக இரகசியமாக நடைபெறுவதால் இதை நீங்கள் எளிதில் கண்டறிய முடியாது. இது போன்ற திருட்டை நீங்கள் தவிர்க்க விரும்பினால் பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துவது அவசியம். உங்கள் மொபைலில் அல்லது கணினியில் ஒரு ஹேக்கர் அணுகியவுடன், அவர்கள் உங்கள் மொத்த தரவுகளை திருட வாய்ப்புகள் உண்டு. 

ஆனால் நீங்கள் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இணையத்தை பாதுகாப்பாக அணுகுவது எப்படி? 

இதோ இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த எட்டு குறிப்புகள் இங்கே. 

1.உங்கள்பிரவுசரை புதுப்பித்து (Update) வைத்திருங்கள்:-

மக்களின் கணினி மற்றும் மொபைல் அமைப்புகளில் நுழைவதற்கான புதிய வழிகளை ஹேக்கர்கள் எப்போதும் தேடுகிறார்கள். பிரவுசரில் பாதிப்பு காணப்படும்போதெல்லாம் ஹேக்கர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க ஒரு புதுப்பிப்பு (Update) வெளியிடப்படும். 

இந்த மாற்றங்களுடன் நீங்கள் புதுப்பித்த நிலையில் இருப்பது மற்றும் புதிய புதுப்பிப்புகளைப் பதிவிறக்குவது அவசியம். 

2. பாப்-அப்களைத் தடுங்கள்:-

பெரும்பாலான பாப்-அப்கள் நீங்கள் பிரவுசரில் உலவி கொண்டிருக்கும் போது விளம்பரங்களாக உங்களுக்கு தோன்றும், ​​நீங்கள் தெரியாமல் அதனை தொடுவது மூலம் உங்கள் மொபைல் மற்றும் கணினி ஹேக் செய்யப்படலாம். 

நீங்கள் தற்செயலாக இணைப்புகளைக் கிளிக் செய்வதற்கான  முயற்சிகளைத் தவிர்க்க, ஒரு பாப்-அப் தடுப்பானை பயன்படுத்துங்கள். 

3. வைரஸ் தடுப்பு மென்பொருளைப் பயன்படுத்துங்கள்:-

வைரஸ்கள்  தாக்குதல்களை நிறுத்த, உங்கள் கணினியில் வைரஸ் தடுப்பு மென்பொருளை பயன்படுத்துவது அவசியம். பல்வேறு தளங்கள் இத்தகைய மென்பொருளை இலவசமாக வழங்கப்படுகிறது நீங்கள் அதனை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். 

4. ஃபயர்வால் பயன்படுத்தவும்:-

ஃபயர்வால் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருப்பது ஹேக்கர்களை தடுப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று. உங்கள் கணினியில் ஏற்கனவே ஃபயர்வால் நிறுவப்பட்டிருந்தால், அது இயக்கப்பட்டு புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்யுங்கள். 

5.வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துங்கள்:-

கடவுச்சொல் மூலம் நீங்கள் ஒரு வலைத்தளத்தை அணுகும்போதெல்லாம் அது தனித்துவமானதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதால் அவை எளிதில் யூகிக்க முடியாது. வலுவான கடவுசொல்லை அமைக்க எழுத்துக்கள் மற்றும் எண்களின் கலவையைப் பயன்படுத்துங்கள், அது மட்டுமின்றி உங்கள் கடவுச்சொற்களை அடிக்கடி மாற்றி கொள்ளுங்கள். 

6.புக்மார்க்குகளை (Bookmark) பயன்படுத்துங்கள்:-

நீங்கள் பொதுவாக பார்வையிடும் வலைத்தளத்தின் பெயரைத் தட்டச்சு செய்யும் போது தவறு செய்வதைத் தவிர்க்க, நீங்கள் எப்போதும் உங்கள் பக்கங்களை புக்மார்க்கு செய்ய வேண்டும். புக்மார்க்கு செய்யப்பட்ட இணைப்பு ஒவ்வொரு முறையும் உங்களை சரியான பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.

எல்லா சாதனங்களிலும் புக்மார்க்குகளை அணுக அனுமதிக்கும் உலாவியைப் பயன்படுத்துங்கள். 

7.நீங்கள் எங்கிருந்து வலையை அணுகுகிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்:-

காபி ஷாப் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இலவசமாக கிடைக்கும்  பிணைப்பு(wifi) மூலம் இணையத்தை அணுக உங்கள் சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் இணைக்கப்பட்டுள்ள பிணையத்தின்(wifi) பாதுகாப்பை உறுதி படுத்திகொள்ளுங்கள். 

பொது நெட்வொர்க்குகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பொது யூ.எஸ்.பி(USB) சாக்கெட்டில் செருகும்போது உங்கள் சாதனத்தைப் பாதுகாக்க பாதுகாப்பான சார்ஜிங் பாயின்ட் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

8.மின்னஞ்சல்களில் (E-Mail) வரும் இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்:-

வைரஸ்கள் மின்னஞ்சல்கள் வழியாக எளிதில் பரப்பலாம். ஒரு மின்னஞ்சலில் ஒரு இணைப்பைக் கிளிக் செய்வதற்கு மட்டுமே போதும் உங்கள் சாதனம் பாதிக்கப்படுவதற்க்கு. ஒரு மின்னஞ்சல் யார் என்பதை நீங்கள் அறிந்திருந்தாலும், இணைப்புகளை சந்தேகத்திற்குரியதாக நீங்கள் எப்போதும் கருதி செயல்பட வேண்டும். 

பாதுகாப்பான வலை உலாவுதல்

பாதுகாப்பான வலை உலாவலுக்கான சில சிறந்த உதவிக்குறிப்புகளை இப்போது நீங்கள் அறிந்திருபபீர்கள்,இதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் தாக்குதலில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். உங்கள் உலாவி, வைரஸ் தடுப்பை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மேலும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். 

மேலும் சிறந்த கட்டுரைகளுக்கு, எங்கள் தளத்தின் எஞ்சிய பகுதிகளைப் பார்க்கவும்.  

Post a Comment

0 Comments