feed

6/recent/ticker-posts

How to speak english - training - english (Part-4) - tamil

LHow to speak english - training - english (Part-4) - tamil

    ஆங்கிலத்தில் பேசத் தொடங்குவதற்கு முன் ஆங்கில வாக்கியங்களின் அடிப்படை அமைப்பைக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். அதற்குமுன்னால் ஒரு கேள்வி, யாராவது ஆங்கிலத்தில் படபடவென்று நீளமாகப் பேசினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

வாயைப் பிளந்துகொண்டு அவர்கள் பேசுவதைப் பார்ப்பீர்கள். அவர் பிரமாதமாக ஆங்கிலம் பேசுகிறவர் என்று மனத்துக்குள் நினைத்துக்கொள்வீர்கள்.

உண்மையில் படபடவென்று வேகமாகப் பேசுவதற்கும் ஆங்கிலப் புலமைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அப்படிப் பேசினால்தான் உசத்தி என்று யாரும் நினைப்பதில்லை. நீங்களும் நினைக்காதீர்கள்! வேகமாகப் பேசுகிறவர்கள் பிழையோடு தவறான ஆங்கிலமும் பேசலாம். நிதானமாக, சிறிய வாக்கியங்களாகப் பேசுகிறவர்கள் சரியான ஆங்கிலமும் பேசலாம்.

சொல்லப்போனால், நல்ல பேச்சாளர்கள் யாரைக் கவனித்துப் பார்த்தாலும் அவர்கள் சிக்கலில்லாத. எளிய வசனங்களாகப் பேசுவார்கள். நீளமாகப் பேசுவதோ, யாருக்கும் தெரியாத பல சொற்களைப் பயன்படுத்துவதோ புத்திசாலித்தனத்தின் அடையாளம் இல்லை. மொழியைப் பொறுத்தவரை எளிமைதான் புத்திசாலித்தனம். காரணம். நள்ளும் திறனுடன் இருக்கமாட்டார்கள். பலருக்கு மெதுவாகப் புரிந்துகொள்ளும் பேசினால்தான் புரியும். ஒருசிலர் வேகமாகப் பேசினாலும் புரிந்துகொள்வார்கள், ஆனால் அவர்களுடைய சதவிகிதம் மிக மிகக் குறைவு. யோசித்துப்பாருங்கள். விறுவிறுப்பான மசாலா படங்கள் பெரிய வெற்றி பேசப்போகிற எல்லாரும் ஒரேமாதிரியான அடைகின்றனவா, அல்லது நிதானமான அவார்ட் படங்களா? ஏன்? அதே லாஜிக்தான் இங்கேயும். ஆகவே, நீங்கள் வேகமாகவோ நீளநீளமாகவோ பேசினால் உங்களுடைய கருத்துகள் பெரும்பான்மை மக்களிடையே சென்று சேர்வதில் தடை ஏற்படும். அதைத் தவிர்ப்பதற்கு எளிய வாக்கியங்களைப் பேசுவதே நல்ல முறை. சிறுவயதில் நீங்களும் நானும் தமிழில் அப்படி எளிய வாக்கியங்களைதான் பேசத் தொடங்கினோம். அதன்பிறகு படிப்படியாக நீளமான, சிக்கலானவாசகங்களைப் பேசப் பழகிவிட்டோம். ஆகவே, இப்போது நமக்கு நீளமாகவும் சிக்கலாகவும் பேசுவதுதான் ஒரு மொழியைப் பேசும் சரியான முறை என்று தோன்றுகிறது. அந்தக் கருத்தை இப்போதே மறந்துவிடுங்கள் நம்முடைய நோக்கம் நீளநீளமாக ஆங்கிலம் பேசுவது அல்ல. கேட்கிறவர்களைத் திகைக்கவைப்பது அல்ல கேட்கிறவர்களுக்குப் புரியும்படி பேசுவதுதான் நம் நோக்கம். அதற்கு எளிமையான வாக்கியங்கள்தான் சரியானவை. எளிமையான வாக்கியம் என்றால் என்ன? தமிழில் ஓர் உதாரணம் சொன்னால் புரியும். நீங்கள் ஒர் ஊருக்குச் செல்கிறீர்கள். அங்கே சிவன் கோயில் தெரு எங்கே உள்ளது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள். அதைப்பற்றி ஒருவரிடம் எப்படிக் கேட்பிர்கள்?

"இங்க சிவன் கோயில் எங்கே இருக்கு?"

இது ஒரு விதம். இன்னொரு விதம், 'சிவன் கோயில் தெருவுக்கு நான் எப்படிப் போறதுன்னு நீங்க தயவுசெஞ்சு சொல்லுவிங்களா?''

இந்த இரண்டு வாக்கியங்களுமே ஒரே விஷயத்தைதான் தெரிவிக்கின்றன. ஆனால் இரண்டாவது வாக்கியம் சற்றே நீளமானது. சிக்கலானது, தமிழ் நன்கு தெரிந்த ஒருவர் இதை எளிமையாகப் புரிந்துகொண்டுவிடுவார். பதில் சொல்லிவிடுவார், தமிழ் தெரியாத ஒருவரிடம் அல்லது தமிழ் ஓரளவே தெரிந்த ஒரு சராசரி நபரிடம் நீங்கள் பேசுவதாக இருந்தால் முதல் வாக்கியம்தான் அதிக பலன் தரும். இரண்டாவது வாக்கியம் அவரைக் குழப்பிவிடக்கூடும். நீங்கள் தமிழ் கற்றுக்கொள்வதாக இருந்தாலும், முதல் வாக்கியம்தான் நன்கு மனத்தில் பதியும், எளிதாகப் பேச இயலும்.

அத்தகைய முதல்வகை வாக்கியங்களை ஆங்கிலத்தில் எப்படிப் பேசுவது என்று சொல்லித்தருவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். பட்பட வென்று பேசி எதிராளியைத் திகைக்கவைப்பது அல்ல! உதாரணமாக இந்த வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம்:

1 am reading a book. இது மிக மிக எளிமையான ஒரு வாக்கியம். ஆங்கிலத்தில் I, Read, Book என்ற மூன்று சொற்களுக்கு உங்களுக்குப் பொருள் தெரிந்தால் இந்த வாக்கியத்தின் அர்த்தம் புரிந்துவிடும். இலக்கணக் குழப்பங்களோ சிக்கலான அமைப்புகளோ தேவையற்ற இழுவையோ இல்லாத எளிமையான வாக்கியம் இது.

இதுமாதிரி பத்து வாக்கியங்களைக் கோத்து, அதன்மூலம் நீங்கள் சொல்லவந்த விஷயத்தைச் சொல்லிவிட்டீர்கள் என்றால் அதுவே ஆங்கிலப் பேச்சுத் திறன் மற்றபடி, நீங்கள் மேடை ஏறி ஆங்கிலம் பேசப்போவதில்லை, பண்டிதர்கள் மத்தியில் பேசப்போவதில்லை. மொழி அறிவில் உங்களைப்போல அல்லது உங்களைவிடச் சற்றே மேம்பட்டவர்களிடம்தான் ஆங்கிலம் பேசப்போகிறீர்கள். ஆகவே இதுமாதிரியான எளிமையான வாக்கியங்களைப் பிழையின்றிப் பேசுவதே நல்ல தொடக்கம். அதற்காக, நீங்கள் நிரந்தரமாக இப்படி எளிய வாக்கியங்களையே பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்று அவசியமில்லை. கொஞ்சநாள் கழித்து ஆங்கிலத்தில் கவிதை எழுதுமளவுக்குப் பண்டிதராகிவிடலம். ஆனால் இப்போது. கற்கத் தொடங்கும் சூழ்நிலையில் இதுபோன்ற எளிய வாக்கியங்களை அடிப்படையாக எடுத்துக்கொள்வோம்.

இந்தப் பதிவை நீங்கள் நிறைவு செய்யும்போது ஆங்கிலத்தில் இதுபோன்ற எளிமையான வாக்கியங்களுடன் தன்னம்பிக்கையாகப் பேச இயலவேண்டும். அதை இலக்காக வைத்துக்கொண்டு அலசலைத் தொடங்குவோம்,

How to speak english - training - english  tamil - (Part-5) to be continued)..

Post a Comment

0 Comments