ஆங்கிலத்தில் பேசுவது எளிதா? சிரமமா? ஏற்கெனவே ஆங்கிலம் பேசுகிறவர்கள், 'செம ஈஸி' என்கிறார்கள். ஆனால், புதிதாக அதில் நுழைய முற்படுகிறவர்களுக்குப் பெரிய தடைகள் தென்படுகின்றன. அது ஒரு பிரமாண்டமான பிரச்னையாகத் தோன்றுகிறது. படிக்கப் படிக்க, கேட்கக் கேட்க, குழப்பங்கள் அதிகரிக்கின்றன, ஒன்றுமே தெரியாததுபோல் ஒரு தோற்றம் சரி, தெரிந்ததை வைத்துச் சமாளிப்போம் என்றால். 'ப்ரோக்கன் இங்க்லீஷ்', ‘பட்லர் இங்க்லீஷ்’ என்று அதற்குப் பெயர் சூட்டியுள்ளார்கள். இலக்கணப்பிழையோடு பேசிப் பிறர் முன்னால் உண்டாகிறது. அவமானப்படுவதற்குப்பதிலாக, சும்மாவே இருந்துவிடலாம் என்று பலரும் வாயை மூடிக்கொள்கிறார்கள்.
ஆங்கிலத்தில் பேசுவது அத்தனை பெரிய சிரமமா? அதற்குப் பெரிய புத்திசாலியாக இருக்கவேண்டுமோ? சின்னக் குழந்தைகள்கூட சரளமாக ஆங்கிலம் பேசுவதைப் பார்க்கிறோம். உலகெங்கும் லட்சக்கணக்கானோர் ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்கள் எல்லாரும் நம்மைவிட புத்திசாலிகளா? முதலில் மொழி அறிவையும் புத்திசாலித்தனத்தையும் இணைக்காதீர்கள். உங்களுக்குத் தெலுங்கு, கன்னடம், பெங்காலிகூட பேசத் தெரியாது,' அதனால் நீங்கள் புத்திசாலி இல்லை என்று ஆகிவிடாது ஆங்கிலம் பேசத்தெரியாவிட்டால்மட்டும் உங்களை அவமானமாகக் கருதிக்கொள்வது ஏன்?' ஆங்கிலம் பேசக் கற்பது என்பது ஒரு கலை, அதைக் கற்றுக்கொண்டுவிட்டால் நாம் அந்த மொழியில் பேசலாம். அவ்வளவுதான், மற்றபடி அது புத்திசாலித்தனத்தின் அடையாளம் அல்ல. ஆங்கிலம் பேசும் முட்டாள்களும் உண்டு ஆங்கிலம் பேசத்தெரியாத மேதைகளும் உண்டு. அதேசமயம், பல மொழிகளைக் கொண்ட நம் நாட்டிலும், வேறு பல நாடுகளிலும் ஆங்கிலம் என்பது ஓர் இணைப்புமொழியாக இருக்கிறது. அதைக் கற்றுக்கொள்வதன்மூலம் நமக்குப் பல வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அதற்காக ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம். கௌரவத்துக்காக அல்ல. அடுத்து, ஆங்கிலம் பேசுவது ஒரு பெரிய பிரச்னையே இல்லை. அப்படியே இருந்தாலும், அதைச் சிறு பிரசனைகளாக உடைத்துத் தீர்த்துவிடலாம். நம் அணுகுமுறையில்தான் எல்லாம் இருக்கிறது. இந்தப் பதிவில் அப்படி ஓர் அணுகுமுறையைப் பயன்படுத்தவுள்ளோம்.
ஆங்கிலத்தில் அதிகம் பயன்படும் சில எளிய வாக்கிய அமைப்புகளை எடுத்துக்கொண்டு. அவற்றை எப்படி அமைத்துப் பேசுவது என்று கற்றுக்கொள்ளப்போகிறோம். இவற்றை வைத்துத் தினசரி வாழ்க்கையில் உரையாடல்களை நிகழ்த்தும் அளவுக்கு முன்னேறப்போகிறோம். அதன்பிறகு, எஞ்சியுள்ள வாக்கிய அமைப்புகள், நுட்பங்களைக் கற்றுக்கொள்ளலாம், அதற்கு எந்த அவசரமும் இல்லை. ஓர் உதாரணத்துடன் சொல்வதென்றால், இப்போது தினசரி வயிறு. நிறைவதற்குச் சாதம் வைத்து சாம்பார், ரசம் செய்யக் கற்றுக்கொள்வோம். பாதாம் பாயசம், வெஜிடபிள் பிரியாணி, நூடூல்ஸ், பீட்ஸ்சா வெல்லாம் அப்புறம் பார்க்கலாம். இதை வாசிக்கத் தொடங்குமுன் ஒரு விஷயத்தை மனத்தில் உறுதியாகத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்: ஆங்கிலம் பேசுவது எளிய விஷயம்தான். அதனைச் சரியான முறைப்படி அணுகினால், வேகமாக அல்லாவிட்டாலும், சரியாகப் பேசப் அங்கிருந்து முன்னேறுவது சுலபம். பழகிவிடலாம். அதன்பிறகு ஆகவே, எந்தத் தயக்கமும் இல்லாமல் உள்ளே வாருங்கள். இதற்காக உழைக்கத் தயாராக உள்ளவர்கள் உயர்வது நிச்சயம்.
How to speak english - training - english tamil - (Part-2 to be continued)..
0 Comments