முந்தைய அத்தியாயத்தில் ஒரு எளிய வாக்கியத்தின் அடிப்படை அம்சங்களாகிய ஆள், வேலை, பொருள் ஆகியவற்றைப் பார்த்தோம். இப்போது, அதில் 'ஆள்' என்ற விஷயத்தைமட்டும் எடுத்துக்கொண்டு கொஞ்சம் விரிவாகப் பேசுவோம்.
ஆள் என்பது, ஒரு செயலைச் செய்கிறவர். இவர் 3 விதமாக அமையலாம்:
1.தன்மை
2.முன்னிலை
3. படர்க்கை
தமிழ் இலக்கண வகுப்பில் எப்போதோ இதையெல்லாம் படித்த ஞாபகம் இருக்கிறதா? இந்தச் சொற்களை நினைவில் வைத்துக்கொள்வது சிரமமாக இருந்தால், கவலை வேண்டாம். ஆங்கிலத்தில் இவற்றை இன்னும் எளிமைப்படுத்திப் பெயர் வைத்திருக்கிறார்கள். நம் வசதிக்கு அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்: 1st Person, 2nd Person, 3rd Person.
1st Person என்றால், ஒருவர் தன்னைப்பற்றிப் பேசிக்கொள்வது. உலகத்தில் மற்ற எல்லாரையும்விட நாம்தானே முக்கியம்? நாம்தானே முதல்?'
ஆக, நான், நாம், என்னுடையது, நம்முடையது போன்ற சொற்கள் அனைத்தும் 1st Person என்ற வகையில் வரும் ஆங்கிலத்தில் இதற்கான சொற்கள் 1, We, My, Our ஆகியவை.
Mine, Ours என்று வேறு சில சொற்களும் 1st Personல் உண்டு. ஆனால் அவற்றை நாம் எளிய வாக்கியங்களில் அவ்வளவாக உபயோக படுத்துவதில்லை என்பதால், இப்போதைக்கு இந்த நான்கு போதும்.
இவை 1st Person சொற்கள். எப்போது நீங்கள் உங்களைப்பற்றியோ, அல்லது நீங்களும் மற்றவர்களும் இருக்கிற ஒரு குழுவைப்பற்றியோ பேசும்போது, இந்த 4 சொற்களில் ஒன்றைதான் பயன்படுதீதவேண்டும்:
I : நான்
We: நாம், அதாவது, நான், இன்னும் சிலர் My: என்னுடைய
Our: நம்முடைய
அடுத்து, 2nd Person. அதாவது, எதிரில் நிற்பவர். நம் எதிரில் நிற்கிற ஒருவரிடம் தமிழில் பேசும்போது நாம் பயன்படுத்தக்கூடிய சொற்கள்: நீ. நீங்கள், தாங்கள், உன், உங்கள், உன்னுடைய உங்களுடைய, போன்றவை. இவற்றுக்கு இணையாக ஆங்கிலத்தில் உள்ள சொற்கள்:
You, Your, தமிழில் இத்தனை சொற்கள் இருக்கின்றன. ஆனால் ஆங்கிலத்தில் இரண்டே இரண்டுதானா? ஆமாம். தமிழில் 'நீ' என்றால் ஒருவரைக் குறிக்கும், "நீங்கள்' என்றால் பலரைக் குறிக்கும், அல்லது ஒருவரையே மரியாதையுடன் குறிப்பிடும். இந்த மூன்று பொருள்களுக்கும் ஆங்கிலத்தில் 'You' என்கிற ஒரே சொல்தான். அதேபோல், உன்னுடைய உங்களுடைய போன்ற சொல்களுக்கு இணையாக ஆங்கிலத்தில் Your என்கிற சொல்லைப் பயன்படுத்துவார்கள். நிறைவாக, 3rd Person நாமும் அல்லாத, எதிரில் நிற்பவரும் அல்லாத பிறர்,
மூன்றாம் நபர்கள்! இந்த வகையில் என்னென்ன சொற்கள் வரும் என்றால், மேலே சொன்ன 1st Person, 2nd Person சொற்களைத்தவிர மீதமுள்ள ஆள்கள் எல்லாரும் 3nd Personதான். உதாரணமாக, 'He' (அவன்), 'She" (அவள்), They' (அவர்கள்)... இந்தச் சொற்கள் நம்மையும் குறிப்பிடவில்லை, எதிரில் நிற்கிறவரையும் குறிப்பிடவில்லை. வேறு யாரோ ஓர் ஆணையோ பெண்ணையோ பலரையோ குறிப்பிடுகின்றன ஆகவே அவை 3rd Person. இவற்றையே 'அவனுடையது அல்லது அவளுடையது அல்லது "அவர்களுடையது என்று சொல்லவேண்டுமானால் His, Her, Their என்ற சொற்களைப் பயன்படுத்தவேண்டும். இவை 1st Personல் வரும் Our, 2nd Personல் வரும் Your ஆகியவற்றுக்கு இணையானவை. இவைதவிர இன்னும் பல 3rd Person சொற்கள் உண்டு. சரியாகச் சொல்வதென்றால் லட்சக்கணக்கில் உண்டு. என்னது? லட்சக்கணக்கா? அத்தனையையும் எப்படி நினைவில் கவலை வேண்டாம், இங்கே நாம் லட்சக்கணக்கு என்று குறிப்பிடுவது வைத்துக்கொள்வது? மனிதர்களின் பெயர்களைதான். உதாரணமாக, ராமன், கந்தன், கவிதா, மைக்கேல், ஜார்ஜ், அப்துல் கலாம், அப்துல் ஹமீது... இப்படி எல்லாப் பெயர்களும் 3rd Person, காரணம், அவை நாமும் அல்ல, எதிரில் உள்ளவரும் அல்ல, வேறு யாரோ.
அவனுடையது, அவளுடையது என்பதுபோல், ராமனுடையது, ஜார்ஜுடையது என்று எப்படிக் குறிப்பிடுவது? அது மிகச் சுலபம். பெயருக்குப் பின்னால் ஓர் ஒற்றை மேற்கோள் குறி போட்டு, 's' என்ற ஆங்கில எழுத்தைச் சேர்த்தால் போதும். உதாரணமாக, ராமனுடையது: Raman's' ஜார்ஜுடையது: George's இப்படி ஒரு வாக்கியத்தைப் பேசத் தொடங்குமுன் ஆள் 1st Personனா, 2nd Personனர் அல்லது 3rd Personனா என்பதைத் தீர்மானித்துவிட்டால், வாக்கியத்தில் ஒரு பகுதியைச் சரியாக அமைத்துவிட்டோம் என்று அர்த்தம்.
இது எல்லாருக்கும் எளிமையாக வரக்கூடியதுதான். இதில் யாரும் பிழை செய்ய வாய்ப்பே இல்லை. இருந்தாலும் இதை முறைப்படி கற்றுக்கொண்டு இரண்டாவது கட்டத்துக்கு நகருவோம்.
இப்போது உங்களுக்குச் சில பயிற்சிகள். கீழே கொடுக்கப்பட்டுள்ள 15 வாக்கியங்களில் 'ஆள்' எது என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். அதன்பிறகு, அந்த ஆள் Ist Personனா, 2nd Personனா அல்லது 3rd Personனா என்பதைப் பக்கத்தில் குறியுங்கள்.
1. I am walking.
2. You are talking.
3. He is skipping.
4. She is reading.
5. James goes to Delhi.
6. You are a sweet person.
7. His goal is to win.
8. The president is addressing the meeting.
9. My hands are wet.
10. They bullt this beautiful building.
11.I am going to fix this problem immediately.
12. He is an amazing talent.
13. Our aunt is an amazing dancer,
How to speak english - training - english tamil - (Part-7) to be continued)..
0 Comments