feed

6/recent/ticker-posts

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Online shopping

இன்றைய காலகட்டத்தில் நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலமாக நம் வாங்கி கொள்ள முடியும் அவ்வாறு வாங்கும் பொருட்கள் தரமானதாகவும் மற்றும் சரியானதை எப்படி தேர்ந்தெடுத்து வாங்குவது  என்பது பற்றி பார்ப்போம். 

1.Return policy

ஆன்லைன் ஷாப்பிங் போது  இந்த Return policy வசதி உள்ளதா என்று பார்ப்பது அவசியமாகும் ஏனெனில் நீங்கள் ஒரு பொருளை வாங்கும் போது அது பழுதடைந்திருந்தால் அதை மாற்றி ௧ொள்ள முடியும். அதுமட்டுமின்றி நீங்கள் உடையே அல்லது காலணியோ வாங்கும் போது அதன் அளவு சரியாக இல்லை என்றால் அதை திரும்ப அனுப்பி வேறு ஒன்றை வாங்கும் வசதி இருப்பது அவசியமாகும். 

2.Delivery cost & time

 இது மிகவும் அவசியமாக கவனிக்க வேண்டிய விஷயமாகும் ஏனெனில் இப்போதெல்லாம் பெரும்பாலும் free shipping செய்கிறார்கள் இந்நிலையில் shipping செய்வதற்கு என தனியாக கட்டணம் வசூலித்தால் அந்த தளத்தை தவிர்பது நல்லதாகும். 

Shipping time என்பதை பொறுத்தவரையில் எந்த ஒரு பொருளுக்கும் அதிகபட்சமாகவே 15 நாட்கள் தான் எடுத்துகொள்ளும் அதற்கு மேல் காத்திருக்க நேர்ந்தால் நீங்கள் வேறு தளத்தில் வாங்கலாம். ஏனெனில் பெரு நகரங்களில் 4-5 நாட்களுக்குள் ஆர்டர் செய்த பொருட்கள் கிடைத்துவிடும். 

3.Cash Back

இந்த வசதியை பயன்படுத்தி ஒரு பொருளை வாங்கும் போது நீங்கள் செலுத்தம் பணமானது திரும்பவும் உங்களுக்கே பாதியாகவே அல்லது முழுவதுமாகவே கிடைக்கும் எனவே ஒரு பொருளை வாங்கும் முன் cashback வசதி உள்ளதா என்று பார்த்து விட்டு வாங்குங்கள். 

4.Product quality & review

பிரபலமான மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் உண்மையான  நிறுவன பொருட்களையே வழங்குகின்றன  எனவே போலியான பொருட்கள் வந்துவிடுமோ என பயப்பட தேவையில்லை மற்றும் நீங்கள் வாங்கும் பொருளுக்கு  manufacturer Warenty என்பது இருக்கிறதா என பார்த்து விட்டு வாங்குங்கள். 

ஒரு பொருளை பற்றி தெரியாமல் வாங்குகிறீர்கள் என்றால் அதன் பயன்பாடு மற்றும் தரம் போன்றவற்றை அறிய பெரும்பாலான தளங்களில் customer review என்பது பொதுமக்கள் பார்வைக்கு கொடுக்கபட்டிருக்கும்    இதன் மூலம் அந்த பொருட்களின் நிறை குறைகளை அறிந்து கொள்ள முடியும். 

5.Payment method

ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போதே credit card, debit card, net banking மூலம் பணத்தை செலுத்தி கொள்ள முடியும் இது பாதுகாப்பாக உள்ளதா என உறுதி படுத்திகொள்ள வேண்டும் , பணம் செலுத்தும் பக்கம் https என இருக்க வேண்டும் வெறும் http என்று மட்டும் இருந்தால் அந்த தளத்தில் ஆர்டர் செய்வதை தவிர்ப்பது நல்லது. 

இதில் cash on delivery எனும் வசதி உள்ளது இதை தேர்ந்தெடுத்து கொண்டால் பொருள் உங்களுக்கு வந்து சேரும் நாளன்று பணம் செலுத்தினால் போதும்

Post a Comment

0 Comments