இன்றைய இணைய உலகில் அனைவராலும் பயன்படுத்தபடுகின்ற ஒரு தளமாக கூகுள் உருவெடுத்ததுள்ளது. இன்று எந்த ஒரு தளத்தை தேடவும் இணைய பயன்பாட்டாளர்கள் முதலில் நாடுவது கூகுள் தளத்தை தான் மற்றும் இதன் கூடுதலாக இணையத்தில் பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் முக்கிய தினங்களுக்கு கூகுளின் லேகோவானது மாற்றப்படுகிறது அது அன்றைய தினத்தின் சிறப்பினை விளக்குகிறது இது கூகுள் டுடில் (Google Doodle) என அழைக்கப்படுகிறது, கூகுள் இத்தகைய சேவைகளை வழங்குவது மட்டுமின்றி பலருக்கும் தெரியாத சில யுக்திகளை (Google tricks) கொண்டுள்ளது அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.
முதலில் கூகுள் பிரவுசரின் விண்டோவிற்கு செல்லவேண்டும் பின் கீழே தரப்பட்டுள்ள சில கமெண்ட்களை கூகுள் தேடல் முடிவுகளின் மூலம் நீங்கள் பெறலாம்.
1.Google Guitar
இதனை டைப் செய்து தேடுவதன் மூலம் கூகுளின் முகப்புக்கு மேல் ஒரு Guitar வடிவம் தோன்றும் இதனை நீங்கள் இசைக்கவும் செய்யலாம் அதுமட்டுமின்றி நீங்கள் இசைத்ததை பதிவு செய்து உங்கள் நண்பர்களுக்கும் சேர் செய்துகொள்ளலாம்.
2.Google snake
இதனை டைப் செய்து தேடுவதன் மூலம் 90's களின் விருப்பமான Snake game ஐ விளையாடுவதற்கான விண்டோ உங்கள் மொபைல் திரையில் தோன்றும் அதில் நீங்கள் அந்த Game ஐ விளையாட முடியும்.
3.Zerg rush
என்கிற வார்த்தையைத் தேடியபின், Google படத்திலிருந்து வரும் “O’s” “zerglings” ஆக மாறுகிறது. பின் இது தேடல் பக்கத்தில் உள்ள எல்லா தேடல் முடிவுகளையும் அழிக்ககிறது அதன் பின்னர் அந்த 'O' எல்லாம் ஒன்றினைந்து 'GG' என்ற வார்த்தையை வடிவமைத்து உங்களுக்கு காட்டுகிறது.
4.Calculator
இதனை டைப் செய்து தேடுவதன் மூலம் கூகுள் கால்குலேட்டரை உங்களது மொபைல் திரையில் பெறலாம் இது அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
5.Google mirror
இதன் தேடல் முடிவுகளானது Google என்ற பெயரை elgooG (அதாவது கூகிள் பின்னோக்கிச் சொல்லப்பட்ட சொல்) உங்களுக்கு காண்பிக்கும் அதுமட்டுமின்றி நீங்கள் அதில் தேடுவதன் மூலம் பெறும் அனைத்து முடிவுகளும் பின்னோக்கி இருக்கும் இதுவே Google கண்ணாடி என அழைக்கப்படுகிறது.
6.Google Sphere
கூகிள் கோளம், பெயர் குறிப்பிடுவது போல, இது உங்கள் பக்கத்தை ஒரு கோளமாக மாற்றும். எல்லா உறுப்புகளும் மற்றும் பக்கத்தில் உள்ள அனைத்து இணைப்புகளும் ஒரு கோளத்தில் நகரும். இணைப்புகள் நகர்ந்தாலும் அவை கிளிக் செய்யக்கூடியவை, இன்னும் நீங்கள் அவற்றைக் கிளிக் செய்யலாம். உங்கள் சுட்டியைக் கொண்டு கோலத்தையும் கட்டுப்படுத்தலாம்.
7.Google termial
இது உங்களுக்கு ஒரு கோடிங் (coding) செய்வதற்கான பக்கத்தை காண்பிக்கும் இதன் மூலம் நீங்கள் எளிதாக கோடிங் அடிப்படைகளை ௧ற்றுகொள்ளலாம்.
8.Do a barrel roll
இதை நீங்கள் தட்டச்சு செய்து தேடும்போது கூகுள் திரையானது ஒரு முறை கிடைமட்டமாக சுழன்று முடிக்கும் இதை நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த திசையிலும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் சுழல செய்ய முடியும்.
9.Google gravity
இதனை தேடினால் கூகுள் முகப்பு பக்கம் தோன்றும் அதை தொடுவதன் மூலம் அந்த பக்கம் முழுவதும் கீழே விழுந்து விடும் பின் உங்கள் மொபைல் அசைவிற்கேற்ப அந்த திரையில் உள்ளவை அனைத்தும் இடம் மாறும்.
10.Google under water
இந்த கமெண்ட் செய்வதன் மூலம் கூகுள் முகப்பு நீரில் மூழ்கி காணப்படும் மேலும் அதில் கடல் உயிரினங்களும் இடம் பெற்றுள்ளது.
0 Comments