சூரியன் பூமியை காட்டிலும் மிகப்பெரிய கோளாகும். பூமியின் சுற்றளவு என்பது சுமார் 25 ஆயிரம் மையில்களாகும் ஆனால் இதை விட மூன்று லட்சம் மடங்கு பெரியது சூரியன், மற்றும் அதன் உஷ்ணமானது விளிம்பில் 6 ஆயிரம் டிகிரி என்றும் கோளின் மையத்தில் 20 ஆயிரம் டிகிரி என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அப்படியானால் அதன் மொத்த வெப்பம் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டு பாருங்கள்.
அப்படியிருந்தும் சூரியனின் வெப்பமானது நம்மை எரித்துவிடாமல் இருப்பதற்கு என்ன காரணம். இதற்கான விடை சூரியனிடமிருந்து வரும் ஒளியில் ஏழுநிறகதிர்கள் உண்டு அதாவது சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா என்ற வரிசையில் சிவப்பு மற்றும் ஊதாவுக்கு அப்புறமும் கதிர்கள் உண்டு இதில் வெயில் மூலம் உண்டாகும் சூடு சிவப்புக்கு அப்புறம் உண்டாகும் கதிர்களால்தான். இந்த கதிர்களால் உண்டாகும் சூட்டை நம்மால் தாங்கிகொள்ள முடியும் ஆனால் ஊதாவுக்கு அப்புறம் உள்ள கதிர்களால் உண்டாகும் சூட்டை நம்மால் தாங்க முடியாது, ஆனால் அந்த கதிர்களானது நம்மிடம் முழுவதுமாக வந்து சேர்வதில்லை இதற்கு காரணமாக அமைந்து இருப்பது ஓசோன் என்றழைக்கப்படும் படலமானது பூமியை சுற்றி 25 மைல்கள் இருப்பதால் அந்த படலமானது அந்த கதிர்களின் பெரும்பாலானவற்றை கிரகித்து கொள்கிறது. இதனால் தான் நாம் சூரியனின் மூலம் வெளியிடப்படும் பெரும் உஷ்ணத்தையும் தாங்கிகொண்டிருக்கிறேம்.
0 Comments