feed

6/recent/ticker-posts

பூமி சுழல்வதை நம்மால் ஏன் உணர முடிவதில்லை?

Why we can't feel earth rotation speed what is the reason behind this

இந்த அண்டத்தில் உள்ள எல்லா கோள்களும் ஏதோவொரு விசையால் இயக்கப்பட்டு தன்னைத்தானே சுற்றிவந்து சூரியனையும் சுற்றி வருகிறது இதில் நம்முடைய பூமி கோளும் அடங்கும்

பூமியானது தன்னைத் தானே சுற்றிக்கொள்ள  எடுத்து ௧ொள்ளும் கால அளவு 23 மணிநேரம் 56 நிமிடம் 4.09 நொடிகள் எடுத்துக்கொள்கிறது இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் தன்னை தானே சுழன்று முடிக்க வேண்டும் என்றால் அது எந்த அளவு வேகமாக சுழன்று ௧ொண்டிருக்கிறது என்பதை ௧ணக்கிட்டு பாருங்கள்.

பூமியின் சுழற்சி வேகம் கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கு சுமார் 1674 கி.மீ எனும் வேகத்தில் சுழன்று கொண்டிருக்கிறது இதை ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகம் என்று கூறலாம் இவ்வளவு வேகமாக சுழலும்போதும்  நம்மால் ஏன் அந்த சுழற்சியை உணரமுடிவதில்லை இதற்கான காரணம் Frames of reference என்ப்படும் கண்ணோட்டம் என்று கூறலாம். 

இதை எளிமையாக ஒரு உதாரணத்துடன் பார்க்கலாம் ஒரு ரயிலில் பயணம் செய்யும் போது நம்மால் அந்த ரயில் பயணிக்கும் வேகத்தை உணர முடியாது. இதை நாம் இரண்டு கண்ணோட்டமாக பார்க்கலாம் ஒன்று ரயிலின் உள்ளே இருப்பவரின் கண்ணோட்டம்  என்னவென்றால் அவர் நிலையாக இருப்பது போலவும் ரயிலுக்கு வெளியே இருப்பதெல்லாம் நகர்வது போலவும் தோன்றும் இதற்கு காரணம் frame of reference என்பது அந்த ரயிலுடன் இருக்கும். 

இன்னொரு கண்ணோட்டம் என்னவெனில் நடைமேடையிலிருந்து பார்க்கும் போது சுற்றியுள்ளவை எல்லாம் நிலையாக இருக்கும் ரயில் மட்டும் நகர்வது போல தோன்றும் இதற்கு காரணம் frame of reference என்பது அந்த நடைமேடையில் இருக்கும்.

இதே விதிதான் நம் பூமியின் சுழற்சியிலும் செயல்படுகிறது அந்த ரயில்தான் நம்முடைய பூமி நடைமேடை என்பது அண்டம் பூமியிலிருந்து பார்கும் போது பூமி நகர்வது போல தெரியாது வானம் நகர்வது போல தோன்றும் இதற்கு காரணம் frame of reference என்பது பூமியிலிருக்கிறது இதையே வெளியிலிருந்து பார்க்கும் போது பூமி நகர்வது போல தெரியும் அங்கு frame of reference என்பது வானம். 

அதேபோல் ரயிலில் பயணிக்கும் போது அங்கே உள்ள காற்றும் ரயிலின் வேகத்திற்கு இணையாகவே பயணிப்பதால் காற்றும் நம் பயணிக்கும் வேகத்தை காட்டாது அதேபோல வளிமண்டலமும் பூமிக்கு இணையான வேகத்தை கொண்டு நகர்ந்து கொண்டிருப்கதால் காற்றின் மூலமும் பூமியின் வேகம் வெளிப்படாது. 

ஆனால்  ரயிலின் வேகம் அதிகரித்தாலே குறைந்தாலே நம்மால் அதை உணரமுடியும் ஆனால் பூமியை பொறுத்தவரை அவ்வாறு நிகழ வாய்பில்லை அது எப்போதும் நிலையான வேகத்திலே சுழன்று௧ொண்டிருக்கும் அதேபோல் அந்த விசையானது நம் மீது இருந்துகொண்டே இருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்