feed

6/recent/ticker-posts

பிட்காயின் என்பது என்ன ?

What is Bitcoin

பணத்தை பொறுத்தவரையில் அது ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுகிறது ஒரு நாட்டில் பயன்படுத்தும் பணம் என்பது அந்த நாட்டின் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு அந்த நாட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. ஆனால் எந்தவொரு நாட்டின் அரசாங்கத்தாலும் உருவாக்கப்படாத மற்றும் உலகில் பெரும்பாலன நாடுகளும் ஏற்றுகொண்ட பணம்தான் பிட்காயின் (Bitcoin) தற்போது இந்த பணமானது அமெரிக்க, ஐரோப்பிய போன்ற நாடுகளில் பரவலாக  பயன்படுத்தபட்டு வருகிறது. 

இரு நபர்கள் தங்களிடையே பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளவும் அதில் இருவரின் தனிப்பட்ட அடையாளத்தை பார்த்துக் கொள்ளவும் உருவாக்கபட்ட கணினி முறையே  பிட்கயின் Bitcoin : A Peer to Peer Electronic Cash System என்கிற கட்டுரையை 2008-ல் "Satoshi Nakamoto" என்பவர்  வெளியிட்டார். அடுத்த சில மாதங்களிலேயே  இந்தக் கட்டுரையின் அடிப்படையில் ஒரு கணினி மென்பொருள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. பிட்காயினுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளலாம். 

இந்த பிட்காயினை mining மூலமாக பெறலாம் அல்லது இதற்காகவே உள்ள சந்தையில் எந்தவொரு நாட்டின் பணத்தையும் கொடுத்து பிட்காயினை பெறமுடியும். Bitcoin Watch என்ற இணையதளம் மூலம் பிட்காயின் நிலவரங்களை கண்காணிக்க முடியும். 

பெரு நிறுவனங்களாகிய microsoft, wikipedia, Tesla போன்ற பல வகையான நிறுவனங்களில் பிட்காயின் பணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பிட்காயினை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களின் மற்றும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த பிட்காயின் முறையில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது  இதில் அசல் பணம் கைமாறததால் vista, MasterCard  போன்ற மூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல் ஒரு நபர் நேரடியாக மற்றொருவர்க்கு பணத்தை கணினி மூலம் அனுப்புவது பிட்காயினின் சிறப்பாகும்

பத்து நிமிடங்களில் அல்லது அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் பிட்காயின் மூலம் ஒருவருக்கு அனுப்பலாம் இவ்வாறு மேற்கொள்ளும் பிட்காயின் பரிவர்த்தனைக்குக் கட்டணம் ஏதும் கிடையாது. 

ஒரு பிட்காயினினின் ஆயிரத்தில் ஒரு பகுதியை milli பிட்காயின் (0.001) என்றும் பத்து லட்சத்தின் ஒரு பகுதியை micro பிட்காயின் (0.000001) என்றும் குறிப்பிடுகின்றனர். 

இதுவரை வரையறுக்கப்பட்டவாறு  அதிகபட்சமாக 21 மில்லியன் பிட்காயின்களை மட்டுமே உருவாக்க முடியும். 

இன்று வரை அரசாங்கத்தால் இந்த பிட்காயின் அங்கிகரிக்கபடாத போதிலும் பலர் அதன் உண்மை தன்மையாலும் போலியான பிட்காயினை உருவாக்க முடியாது என அதன் மீது நம்பிக்கை கொண்டும் பயன்படுத்தி வருகின்றனர். 

அதுமட்டுமின்றி ஒருவரிடம் எவ்வளவு பிட்காயின் உள்ளது என்பதை கண்டறிய முடியாது இதனால் தனிப்பட்ட ஒருவரின் சொத்துகள் மறைக்கப்படுகிறது. 

ஒரு பிட்காயினை உருவாக்கவும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் மற்றும் அதனை சேமித்து வைக்கவும் ஒரு மென்பொருள் உண்டு இதில் நடைபெறும் எல்லா பரிவர்த்தனைகளும் அனைவரும் பார்க்க இயலும் எனவே யாருக்கும் தெரியாமல் பரிவர்த்தனை மேற்கொள்ள இயலாது எனவே கணக்கில் வராத கறுப்பு பிட்காயின் இருக்க வாய்பில்லை. 

பிட்காயினை சட்டரீதியாக ஏற்றுக் கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் இதை பயன் படுத்துபவர்களின் அடையாளமானது மறைக்கப்பட்டிருக்கும், இதன் பயன்பாட்டாளர்கள் தாமே அடையாளத்தை வெளிப்படுத்தினால் தவிர, இது பற்றிய தகவல்களை அரசு பெற வேண்டும் என்றால் கூட அதனை பயன்படுத்துபவர் அதற்கு அனுமதிக்க வேண்டும் உலகம் முழுவதும் இதனை பயன்படுத்துபவர்கள் இருப்பதால் இந்த அனுமதியை பெறுவது அவ்வளவு எளிதல்ல.

Litecoin, Peercoin, Primecoin, Namecoin, Ripple, Sexcoin, Quark, Freicoin, Mastercoin, Nxt, Auroracoin, Dogecoin  இவையனைத்தும் பிட்காயின் உருவான பின் வந்த கணினி பணங்களாகும் இதில் 90% மேல் பிட்காயின்தான் புழக்கத்தில் உள்ளது.

Post a Comment

0 Comments