feed

6/recent/ticker-posts

பிராணயாமம் செய்வது எப்படி?

 

How to do pranayam

பொதுவாக யோக பயிற்சி என்பது புறப்பார்வையை கடந்து அகபார்வையை பெறுவதேயாகும், அதாவது நம்மில் இருக்கும் ஆன்மாவை உணரும் பயணமே யோகம் அந்த ஆழ்ந்த நிலையை அடைய உதவியாக இருப்பதே பிராணயாமம் (Pranayam). இது நம் மூச்சு காற்றை ஒழுங்கு படுத்துகிறது, சுருக்கமாக கூறினால் இது ஒரு மூச்சு பயிற்சியேயாகும். 

இதனை செய்ய சில ௧ட்டுபாடுகள் உண்டு இதை சரியாக பின்பற்றினால் முழு பலன் உங்களுக்கு கிடைக்கும் அந்த கட்டுப்பாடுகள் இதே

இந்த பயிற்சியை மேற்கொள்வதற்கு முன் உணவு உட்கொண்டிருக்ககூடாது மற்றும் இதனை காலையில் எழுந்ததும் , மாலை சூரியன் அஸ்தமனமாகும் நேரத்திலும் செய்வது உகந்தாகும்.நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் சத்தமில்லாமல் அமைதியான சூழலில் இருத்தல் வேண்டும்.    

குண்டலினி யோகத்தில் முக்கியதொரு அங்கமாக விளங்குகிறது. இந்த பயிற்சி பெற்ற பின்னரே  அடுத்தடுத்து வரும் பயிற்சிகளை எளிதாக செய்ய முடியும். 

இந்த செயல்முறையானது மூன்று கட்டங்களை கொண்டதாகும் அவை மூச்சை உள்ளே இழுப்பது பூரகம், உள்ளே இழுத்த மூச்சை சில வினாடிகள் நிறுத்துவது கும்பகம், அவ்வாறு நிறுத்திய மூச்சை மெதுவாக வெளிவிடுவது ரேசகம் என்று அழைக்கப்படுகிறது. 

இப்போது அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்

முதலில் தரையில் ஒரு விரிப்பு அல்லது ஒரு பாய் ஒன்றை போட்டு அமர்ந்து கொள்ளுங்கள், காலை நேரங்களில் கிழக்கை பார்த்தும் மாலை நேரங்களில் மேற்கே பார்த்து அமர்தலும் இதற்கு ஏற்றது, அதன்பின் பத்மாசனம் முறையில் அமர்ந்து கொள்ள வேண்டும் அப்படி அமரும் போது முதுகு தண்டு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம். பின் இரண்டு கைகளையும் முழங்கால் மேல் வைத்து கொள்ள வேண்டும் உள்ளங்கைகள் மேல் நோக்கி இருத்தல் வேண்டும், பின் வலக்கை கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சின் முத்திரையில் வைத்து கொள்ளுங்கள் இப்போது மூச்சை கவனியுங்கள். 

முதலில் வலது நாசி துவாரத்தை வலக்கை கட்டை விரலால் மூடிக்கொண்டு இடது நாசி துவாரத்தால் மூச்சை உள்ளிழுக்க வேண்டும் உள்ளிழுத்த மூச்சை நிறுத்தியவண்ணம் வலது நாசியை விடுவித்து விட்டு இப்போது இடது நாசிதுவாரத்தை வலக்கை மோதிரவிரலால் அடைத்தபடி உள்ளே நிறுத்திய மூச்சை வெளிவிட வேண்டும் பின்னர் மீண்டும் வலது நாசியின் மூலம் மூச்சை உள்ளிழுத்து வலது நாசியை அடைத்து கொண்டு இடது நாசிமூலம் வெளிவிட வேண்டும் பின் இடது நாசியில் மூச்சை உள்ளிழுத்து அதை அடைத்து வைத்து வலது நாசியில் வெளிவிட வேண்டும் இதனை தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்கையில் மூச்சை உள்ளே இழுக்கும் போது 'அ' என்றும் மூச்சை நிறுத்தும் போது 'உ' என்றும் வெளியே விடும் போது 'அம்' என்று கூறி கொண்டே செய்யும் போது 'ஓம்' என்கிற மந்திரத்தை அறியலாம் இந்த செயல்முறையே பிராணாயாமம் ஆகும்.

______________________________________

#how_to_do_prananyam

#pranayam_yoga

#how_to_do_pranayam_yoga_properly

#pranayam_in_tamil 

Post a Comment

0 Comments