நீங்கள் மகிழ்ச்சியாக உள்ளீர்களா? புன்னகையுங்கள், அதுமட்டுமில்லாது நீங்கள் சந்தோஷமா௧ இல்லாதபோதும் கூட புன்னகைப்பதால் மூளையின் இடது பக்கத்தில் உள்ள சந்தோஷ வட்டத்தில் மின் அலைகள் பாய்கின்றன அதுமட்டுமின்றி உடலில் உள்ள என்டார்ஃபின்கள் மற்றும் சந்தோஷத்தை அதிகரிக்கும் சுரப்பிகள் உடலில் சுரக்க உதவுகிறது இதனால் மன அழுத்தம் வில௧ி உடல் குணமாகிறது , உடலை பலவீனமாக்கும் ஆங்கைலோ ஸ்பான்டிலிடிஸ் என்ற நோயால் நார்மன் கசின்ஸ் பாதிக்க பட்டிருக்கும்போது மருத்துவர்கள் தங்களால் அவருக்கு உதவ முடியாது என்றும் இறப்பதற்கு முன் வலியால் சித்தரவதைக்கு உள்ளாவார் என்றும் கூறினார்கள். கசின்ஸ் அதை காதில் போட்டு கொள்ளாமல் ஓர் ஓட்டல் அறையில் தங்கி எல்லா சிரிப்பு படங்களையும் எடுத்து கொண்டார் அவற்றை மறுபடி மறுபடி பார்த்தார் வயிறு வெடிக்கும் படி சிரித்தார் இப்படி ஆறு மாதம் சிரிப்பு வைத்தியம் அவருக்கு அவரே செய்துகொண்ட பிறகு அவரின் நோய் முழுவதுமாக குணமாகிவிட்டதை கண்ட மருத்துவர்கள் ஆச்சர்யப்பட்டனர் இந்த அனுபவத்தை அவர் "ஒரு நோயின் கதை" என்ற நூலில் எழுதியுள்ளார் . இந்த புன்னகையானது உடலில் ஒரு அங்கமாக மாறிவிட்டால் நண்பர்கள் பெருகுவார்கள் , ஆரோக்கியம் பெருகும், ஆயுள் அதிகரிக்கும் இன்னும் பல பயன்களும் ஒரு புன்னகையின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் . போனஸ் டிப்ஸ் உங்களுக்காக, என்னவெனில் இன்றைய சமூக வலைதளங்களில் ஆட்கள் அதிகமாக லைக்கிடும் புகைப்படங்களுக்கு சில பொதுவான குணங்கள் உண்டு அது என்னவெனில் அந்த புகைப்படத்தில் உள்ளவர் முகத்தில் புன்கையை கொண்டுள்தேயாகும் இனியும் சிரிக்க தயங்௧ வேண்டாம் .
ஸ்மைல் ப்ளீஸ்..!!
0 Comments