மார்ச் 1 இன்று முதல் இரண்டாம் கட்ட கொரேனா தடுப்பூசி போடப்பட உள்ளது இதற்காக பயனாளர்கள் தங்களது பெயரை ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்
கொரானா தொற்று அறிகுறிகள் உள்ள 60 வயது மற்றும் 45 வயது மேற்பட்டவர்களுக்காக இந்த தடுப்பூசியானது போடப்படுகிறது.
இன்று முதல் Covin ஆப்பில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள முடியும் இதை விட்டால் தடுப்பூசி போடும் இடத்திலும் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
Covi shield மற்றும் Co-vaccine ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளது பயனர்கள் தங்கள் தடுப்பூசி போட்டு கொள்ளும் மையம் மற்றும் தேதியை பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இந்த ஆப் மூலம் ரிஜிஸ்டர் செய்து கொள்ள முடியும். ஒரு மொபைல் போனின் மூலம் நான்கு பயனருக்கு பதிவு செய்ய முடியும். ஆரோக்யா சேது செயலி மூலமாகவும் ரிஜிஸ்டர் செய்ய முடியும்.
இப்போது Co-WIN ஆப் இல் எப்படி பதிவு செய்வது என்பது பற்றி பார்ப்போம்
முதலில் play store ல் இருந்து கோ-வின் ஆப்பினை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அல்லது cowin.gov.in வலைத்தளதிற்கு செல்லவும் பின் உங்களது மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை உள்ளிடவும். பிறகு நீங்கள் தடுப்பூசி போட்டு கொள்ள விரும்பும் தேதி மற்றும் மையத்தை தேர்ந்தெடுங்கள்.
அதன் பின்னர் உங்களுக்கு ஒரு OTP கிடைக்கும் அதன் மூலம் உங்களுக்கான அக்கவுண்ட் உருவாக்கப்படும் உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் அதே அக்கவுண்ட் வழியாக பதிவு செய்யலாம்.
அதன் பின் நீங்கள் திட்டமிட்ட தேதியில் அந்த மையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

0 கருத்துகள்